search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரபாபு நாயுடு"

    • பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை.
    • ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

    பா ஜனதா, தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா ஆகியவை கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருகிறது. ஆனால் பா.ஜ.க. மற்றும் பவன் கல்யாண் ஆகிய 2 கட்சிகளுக்கும் சேர்த்து 5 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கேட்ட தொகுதிகளை தர வேண்டும் என பா.ஜ.க அழுத்தம் கொடுத்தது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் 118 சட்டப்பேரவை தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிடுவதற்காக தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் வீட்டில், இணைந்து வெளியிட்டனர். ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.


    பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை. கேட்ட தொகுதிகளையும் பா.ஜ.க.வுக்கு சந்திரபாபு நாயுடு ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை சந்திரபாபு நாயுடு திணற விட்டுள்ளார்.

    பா.ஜ.க கூட்டணிக்கு வராவிட்டால் மீதமுள்ள தொகுதிகளிலும் தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி கட்சியினரே வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக தெலுங்கு தேசம் கட்சி 94 வேட்பாளர்ளையும், ஜனசேனா வேட்பாளர்களையும் 5 வேட்பாளர்களையும் அறிவித்து உள்ளது.

    குப்பம் தொகுதியில் மீண்டும் சந்திரபாபுநாயுடு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெளியிட்ட பட்டியலின்படி சந்திரபாபுநாயுடு குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நகரியில் அமைச்சர் ரோஜாவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.சி காளி முத்துகிருஷ்ணம்மா மகன் பானுபிரகாஷ், பலமனேரில் முன்னாள் அமைச்சர் அமர்நாத்தும், சித்தூரில் குருஜால ஜெகன்மோகன், கங்காதர நெல்லூரில் வி.என்.தாமஸ் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
    • 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.

    ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.

    அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.

    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் உள்ள எம்.பி.க்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. வெமிரட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் நெல்லூர் எம்.பி. அட்லா பிரபாகர் ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் ஆளூர் தொகுதியில் போட்டியிட்டு தொழிலாளர் துறை அமைச்சராக உள்ள கும்மனூர் ஜெயராம் 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு கர்னூல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கும்மனூர் ஜெயராம் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

    ஜெயராம் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் மாற்றுக் கட்சிக்கு தாவுவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.
    • சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் சேர்ந்து கட்சியின் மாநில தலைவரானார்.

    அதன் பிறகு பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.

    அவர்களில் முதல் ஆளாக மங்களகிரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆலா ராமகிருஷ்ணன் முதலில் சேர்ந்தார்.


    முதல் மந்திரி ஜெகன் மோகனுக்கு நெருக்கமாக இருந்த ராமகிருஷ்ணா தனிப்பட்ட அதிருப்தியால், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார்.

    ஷர்மிளாவுடன் இணைந்து செயல்பட இருந்த ராமகிருஷ்ணா ஒரு மாதத்திலேயே முதல் மந்திரி ஜெகன் மோகனை சந்தித்து ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    • ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார்.
    • சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

    ஆந்திரா முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    மத்திய மந்திரி அமித்ஷா அழைப்பின் பேரில் சென்ற சந்திரபாபு நாயுடு நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

    அப்போது நாடு மற்றும் மாநிலத்தின் நலனை கருதி சந்திரபாபு நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர அமித்ஷா அழைப்பு விடுத்தார்.

    ஆந்திராவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார்.

    அப்போது ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் திருப்பதி, ராஜ மகேந்திரபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என நிலை உள்ளதால் பா.ஜ.க. கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

    ஆந்திராவில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸுக்கு எதிராக தெலுங்கு தேசம் பா.ஜ.க.-பவன்கல்யானின் ஜனசேனா என வலுவான கூட்டணி அமைய உள்ளதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.
    • ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அறிவித்தார்.

    அடுத்து ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவிற்கு 3 தலை நகரங்கள் என அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.


    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சிந்தா மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி 3 தலை நகரங்களை அறிவித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். இதனால் ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தி திருப்பதியை தலைநகராக மாற்றுவோம் என்றார்.

    • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
    • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

    ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

    ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

    சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்தார்.
    • கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.சர்மிளா டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

    ஐதராபாத்:

    ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.சர்மிளா டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது ஒய்.எஸ்.சர்மிளாவுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.சர்மிளா இன்று சந்தித்துப் பேசினார்.

    • பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தபடி சந்திரபாபு நாயுடு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
    • 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் உள்ள தன்னுடைய சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தார். தமிழக பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து மலர் தூவி தலைப்பாகை சூடி வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தபடி சந்திரபாபு நாயுடு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சந்திரபாபு நாயுடு மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
    • ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகம் வகுத்தார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி மாபெரும் வெற்றி பெற்று முதல் மந்திரியானார்.

    இந்த நிலையில் இந்த முறையும் பிரசாந்த் கிஷோர் தான் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொடுப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத விதத்தில் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர்.

    அதன் பிறகு இருவரும் ஒரே காரில் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

    கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கு வெற்றி பாதை அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் இந்த முறை திடீரென தேர்தலுக்கு முன்பாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில்:-

    சந்திரபாபு நாயுடு ஒரு மூத்த தலைவர். அவர் என்னை சந்திக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி அவரை சந்தித்தேன்.

    இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. வேறு எதுவும் இல்லை என்றார்.

    • வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார்.
    • சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.
    • ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி ரோஜா காக்கிநாடா மாவட்டம் சமல் கோட்டில் உள்ள சாளுக்கிய குமார ராம பீமேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

    இதையடுத்து ராஜ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் தோல்வி அடைவார்கள். தோல்வி அடைந்த பிறகு இருவரும் மனநல கோளாறுகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதற்காக சாமியிடம் பிரார்த்தனை செய்தேன்.

    ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×